×

மின்கம்பி உரசியதால் டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் சாம்பல்

புதுக்கோட்டை, பிப். 11: மின்கம்பி உரசியதால் டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் எரிந்து சாம்பலானது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் மின்சார கம்பி உரசியதால் தீபற்றியதில் வைக்கோல் எறிந்து நாசமானது. அன்னவாசல் அருகே உள்ள அகரப்பட்டியை சேர்ந்தவர் மூக்கையா. இவருக்கு வைக்கோல் ஏற்றி டிராக்டர் ஒன்று அகரப்பட்டி வந்துள்ளது.

குடியிருப்பு பகுதி அருகே டிராக்டர் வந்தபோது அவ்வழியாக சென்ற மின்சார கம்பி மீது வைக்கோல் உரசியது. இதில் தீப்பொறி பரவி வைக்கோல் எரிந்து சாம்பலானது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்றுகூடி போராடி தீயை அணைத்தனர். ஆனால் வைக்கோல் அனைத்தும் தீயில் சாம்பலானது.

Tags :
× RELATED டிராக்டர் மோதி துணை பிடிஓ பலி