×

ஜெயங்கொண்டம் அருகே தென்னூரில் புனித லூர்து அன்னை ஆலய ஆடம்பர தேர் பவனி

ஜெயங்கொண்டம், பிப்.12: ஜெயங்கொண்டம் அருகே உள்ள தென்னூர் புனித லூர்து அன்னை ஆலயத்தில் 174 வது ஆண்டு பெருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது .பெருவிழாவை முன்னிட்டு தென்னூர் பங்குத்தந்தை கிளிப் சந்தியாகு தலைமையில் கொடியேற்றி திருப்பலியுடன் துவக்கி வைத்தார். விழாவை முன்னிட்டு கடந்த 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை சிறப்பு திருப்பலிகள் மற்றும் இன்னிசை கலை நிகழ்ச்சிகள் சிறிய தேர் பவனி ஆகியவை நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை மறைவட்ட முதன்மை குரு ரோச்அலெக்சாண்டர் தலைமையில் சிறப்பு திருப்பலியும் புனித லூர்து அன்னையின் அலங்கார ஆடம்பர தேர் பவனியும் நடைபெற்றது.

அலங்கார ஆடம்பர தேர் முக்கிய வீதிகள் வழியே சென்று வந்தது. நேற்று காலை பங்குத்தந்தை தலைமையில் காலை திருப்பலியுடன் கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு பேரவையினர் மற்றும் பலர் செய்திருந்தனர். பணம் கொடுத்ததற்காக நான் சொன்னதுதான் விலை இடைத்தரகர்களின் அடாவடியால் விழிபிதுங்கும் வாழை விவசாயிகள்வாழை சாகுபடிக்காக பணம் கொடுக்கும் இடைத்தரகர்கள், வாழை ஈன்றியவுடன் நான் சொல்வதுதான் விலை நிர்ணயம் என கூறுவதால் விவசாயிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜாராம் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது: விவசாய செலவு அதிகமான வாழைக்கு சிலஇடைத்தரகர்கள் கன்று, உரம் வாங்க செய்ய நேர்த்தி செய்ய,

முட்டுக்கழிவாங்க என ஏழை விவசாயிகளுக்கு அதிக வட்டியில் பணம் கொடுக்கின்றனர். தார் ஈனியவுடன் அவர்கள் சொல்லும் விலைக்குத்தான் அவர்களுக்கு வாழைத்தார் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். கொடுத்த கடனுக்கே வட்டியுடன் தார் விற்பனையாகவில்லை என கடன் பாக்கிக்காக புரோநோட் எழுதி வாங்கிக் கொள்கின்றனர். இப்படியே நாளாவட்டத்தில் நிலத்தை எழுதிவாங்கிக் கொள்கிறார்கள். கடன் கொடுத்து விவசாயிகளிடம் மிரட்டி இந்த விலைக்குத்தான் வாழைத்தார் கொடுக்க வேண்டும் என பயமுறுத்துகின்றனர். தார்வெட்ட ஆரம்பிக்கும்போது ஏதோ அட்வான்ஸ் கொடுத்து விடுகிறார்கள். மீதி பணத்திற்கு பல மாதங்கள் கால்கடுக்க அவர்கள் வீட்டுவாசலில் விவசாயிகள் தவமிருக்கின்றனர். இறுதியில் பாதி பணத்தைக்கூட வாங்க முடிவதில்லை. அதற்குள் அடுத்த வாழை பருவம் வந்துவிடுகிறது. மீண்டம் அதே கதை.

விரைவில் அழுகும்வாழை போன்றவைகளை வாங்கும் இடைத்தரகர்கள் உரிமம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். சந்தைமூலமாக கொள்முதல் செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என பலமுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தும் பயனில்லை. வாழை வாங்கும் இடைத்தரகர்கள் அரசு லைசென்ஸ் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இடைத்தரகர்கள், கந்து வட்டியில் இருந்து காப்பாற்ற வேண்டும். நியாயமான விலையில் வாழைத்தார் வாங்க வேண்டும். விலையை உடனே அளிக்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டும். இக்கோரிக்கையை 82 வயதில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து வலியுறுத்த அனுமதி தர வேண்டும்.

ஏழை, வாழை விவசாயிகளைக் காப்பாற்ற 82 வயதில் வேறுவழியின்றி இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். இந்த முடிவு வாழை விவசாயிகளின் கஷ்டத்தை அரசுக்கு தெரியப்படுத்தத்தான். அரசு எவ்வளவுதான் ஆதரவாக இருந்தாலும், வாழை விற்பனையில் இடைத்தரகர்கள் வாழை விவசாயிகளை சாகடிக்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு அரசு வாழைத்தார் வாங்குவோர் லைசென்ஸ் பெற்றவராக இருக்க வேண்டும் என உத்தரவிடுவதுதான் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : St. Lourdes Mother Temple Luxury Chair ,Jayankondam ,Southoor ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது