×

பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் வீடு புகுந்து திருட முயன்றவரை சினிமாபட பாணியில் பூட்டிய பெண் மரத்தில் கட்டி வைத்து போலீசில் ஒப்படைப்பு

பெரம்பலூர்,பிப்.12:பெரம்பலூர் அருகே வாலிகண்டபு ரம் கிராமத்தில் வீடுபுகுந்து திருட முயன்ற பெண்ணை சாமி சினிமாப்படத்தின் பாணியில் வீட்டுக்குள் வை த்துப்பூட்டி ஊரைக் கூட்டிய பெண். கையுங்களவுமாக பிடிபட்டதால் மரத்தில் கட்டி வைத்துப் போலீசில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, மங்களமேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட வாலிகண்டபுரம் போஸ்ட் ஆபிஸ் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணசாமி மகன் பாண்டியன்(41).அர சுப் போக்குவரத்துக் கழக த்தில் கண்டக்டராகப் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி(38).
இந்நிலையில் நேற்று மதியம், கண்டக்டர் பாண்டிய னின் வீட்டில் கருப்பு அங்கி அணிந்த பெண் ஒருவர் உள்ளே இருப்பதை, வெளியே பக்கத்து தெருவிற்கு சென்றுவந்த பாண்டியனின் மனைவி வளர்மதி பார்த்து சந்தேகமடைந்துள்ளார். இதனால் சுதாரித்த வளர்மதி யாரோ ஒரு பெண் ஆளில்லாத தனது வீட்டில் நுழைந்து திருடுகிறார்.

அவரை நேரில் சென்று பிடித்தால் தன்னைத் தாக்கி விட்டுத் தப்பிக்கக் கூடும் என நினைத்துத் தனது வீட்டுக்கதவை, சாமி பட பாணி யில் வெளியே இழுத்து சாத்தித் தாழிட்டுள்ளார். பிறகு அக்கம்பக்கத்து வீட்டாரை சத்தம் போட்டு அழைத்துள்ளார். இதனால் சிலநிமிடங்களில் அந்த ஊரைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் கண்டக்டர் பாண்டியன் வீட்டின் முன்பு கூடினர். பிறகு கதவை திறந்து பார்த்தால், அந்த வீட்டிலிருந்து வெள்ளிக் கொலுசு, வெள்ளி அரைஞான்கொடி ஆகியவற்றைத் திருடி கொண்டுவந்த பர்தா அணிந்திருந்த முஸ்லீம் பெண்ணை கையுங்களவுமாக பிடித்து, வாசல் அருகேயுள்ள தென்னை மரத்தில் கட்டிவைத்து மங்களமேடு போலீசாருக் குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை செய்தனர்.

அதில் அவர் குன்னம் தாலுகா, லெப்பைக்குடிகாடு கிராமம், ஜமாலியா நகரை சேர்ந்த ஹாலித் பாஷா என்பவரது மனைவி சம்சாத்(29) என்பது தெரியவந்தது. பிறகு பாண்டியனின் மனைவி வளர்மதியின் சாதுர்யத்தால் சிக்கிப் பொதுமக்களால் விசாரிக்கப்பட்ட சம்ஷாத் மங்களமேடு போலீசாரிடம் ஒப்ப டைக்கப் பட்டார். அவரிடமிருந்து கொலுசு, அரைஞான் கொடி கைப்பற்றப் பட்டது. இதுகுறித்து மங்களமேடு இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் வழக்குப்பதிந்து விசா ரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் வாலிகண்டபு ரம், லெப்பைக் குடிகாடு சுற்றுவட்டாரப்பகுதிகளில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மதியம், கண்டக்டர் பாண்டிய னின் வீட்டில் கருப்பு அங்கி அணிந்த பெண் ஒருவர் உள்ளே இருப்பதை, வெளியே பக்கத்து தெருவிற்கு சென்றுவந்த பாண்டியனின் மனைவி வளர்மதி பார்த்து சந்தேகமடைந்துள்ளார்.

Tags : Valikandapuram ,house ,Perambalur ,
× RELATED சிறப்பு தொழுகை நடைபெற தயார்நிலையில்...