×

அரியலூர் பகுதியில் குரங்குகள் தொல்லை பொதுமக்கள், வியாபாரிகள் அச்சம்

அரியலூர், பிப். 12: அரியலூர் நகரில் கடைவீதி மற்றும் தெருக்களில் சுற்றி திரியும் குரங்குகளால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சமடைந்து வருகின்றனர். அரியலூர் அழகப்பா நகர், செந்துறை சாலை, கல்லூரி சாலை பகுதியில் அதிகளவில் குரங்குகள் சுற்றி திரிகின்றன. இவைகள் கடைகளில் புகுந்து உணவு பொட்டலங்களை எடுத்து சென்று விடுகிறது. மேலும் ரோட்டில் உணவு பொருட்கள் வாங்கி செல்லும் பொதுமக்களிடம் பிடுங்கி கொண்டு ஓடி விடுகிறது. வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை பறித்து உண்பதுடன் பொதுமக்களை கடிக்க வருவதால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களில் ஏதேனும் உள்ளதா என கவரை கடித்து சேதப்படுத்தி விடுகிறது. சில நேரங்களில் குரங்குகள் திடீரென சாலையில் சண்டையிடுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

மேலும் தெருவில் குரங்குகளுக்கு இடையே நடக்கும் சண்டையின்போது பொதுமக்கள் நடமாட முடியாமல் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அரியலூர் அழகப்பா நகர், செந்துறை சாலை, கல்லூரி சாலை பகுதியில் உள்ள குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட்டால் மட்டுமே இப்பகுதி மக்கள் நிம்மதியாக வசிக்க முடியும். எனவே மாவட்ட நிர்வாகம், குரங்குகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : civilians ,Ariyalur ,traders ,
× RELATED விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை