×

காவல் குழுமத்தில் இணைந்த பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

அரியலூர் பிப்.12:அரியலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள காவல் குழும மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது. திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் மற்றும் அரியலூர் எஸ்பி னிவாசன் ஆகியோரால் போலீஸ் கிளப் என்ற பெயரில் காவல் குழுமம் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் துவக்கி வைத்தனர். இக்குழுமத்தின் முக்கிய நோக்கமாக குழந்தை திருமணத்தை முழுமையாக தடுத்தல், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆபத்தான சூழ்நிலைகளில் குழந்தைகள் சிக்கிக் கொண்டால் அதிலிருந்து அவர்களை தற்காத்துக்கொள்ள அவர்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளித்தல் என மாணவர்களுக்கு தெரிவித்தனர் இதன் ஒரு பகுதியாக அரியலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்து இரண்டாவது வார முதல் நாள் வகுப்பாக மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுமதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் ஜீரோ ஹவர்ஸ் எனப்படும் ஒரு மணி நேரம் மின்சாதன பொருட்கள் இல்லாமல் பெற்றோருடன் நேரம் செலவழிப்பது குறித்து பேசினார். காவலன் செயலி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.தொடர்ந்து, மாணவிகளுக்கு ஆபத்து நேரங்களில் தற்காத்துக் கொள்ள அவர்களுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சியை ஆயுதப்படை பெண் காவலர்கள் அளித்தனர்.

Tags : school children ,police force ,
× RELATED காவலர் பணியில் சேர வாய்ப்பு