×

வடிகால் அமைக்கும் பணி மந்தம் க.பரமத்தி ஊத்துபட்டி நெடுஞ்சாலை வெங்கடாபுரம் அருகே ஆபத்தான வலைவில் வேகத்தடை வேண்டும்

க.பரமத்தி, பிப்.12: க.பரமத்தி ஊத்துபட்டி செல்லும் நெடுஞ்சாலையில் வெங்கடாபுரம் அருகே ஆபத்தான வலைவில் விபத்துகளை தடுக்க வேகத்தடைஅமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி பேருந்து நிலையம் பகுதியில் இருந்து சூடாமணி அருகே ஊத்துபட்டி செல்லும் நெடுஞ்சாலையில் நடந்தை அருகே வெங்கடாபுரம் பிரிவு பேருந்து நிறுத்தம் உள்ளது. இதன் அருகே மிகவும் ஆபத்தான வலைவு உள்ளது. இந்த வழியாக அரசு பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள் மற்றும் பைக்குகள் என தினமும் ஏராளமான வாகனங்கள் செல்ல வேண்டி இடத்திற்கு சென்று திரும்புகின்றன. சில நேரங்களில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் வெவ்வேறு விபத்துகள் ஏற்பட்டு பலரும் காயமடைந்ததோடு இதுவரை விபத்துகளில் ஒருசிலர் உயிரிழந்துள்ளனர். எனவே இப்பகுதியில் ஏற்படும் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் பலனில்லை.

இதனால் இப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், க.பரமத்தி பேருந்து நிலையம் பகுதியில் இருந்து சூடாமணி அருகே ஊத்துபட்டி செல்லும் நெடுஞ்சாலையில் நடந்தை அருகே வெங்கடாபுரம் பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள இந்த ஆபத்தான வலைவு வழியாக செல்லும் அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை அச்சத்துடனே கடக்க வேண்டி உள்ளது. அடிக்கடி சிறு, சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இனியாவது விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Drainage workshop ,
× RELATED குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்