×

விவசாயிகள் கோரிக்கை கரூர் நகரின் மையப்பகுதியில் இரவுநேர பாராக மாறும் விளையாட்டு மைதானம்

கரூர், பிப்.12: விளையாட்டு மைதானம் இரவுநேர பார் ஆவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்தள்ளது திருவள்ளுவர் விளையாட்டு மைதானம். காலை நேரத்தில் நடைபயிற்சிக்காகவும், விளையாட்டு பயிற்சிக்காகவும் ஏராளமானோர் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். காலையில் விளையாட்டு மைதானமாக காட்சியளிக்கின்ற திருவள்ளுவர் விளையாட்டு மைதானம் இரவு நேரத்தில் திறந்தவெளி பாராக மாறிவிடுகிறது.

சமூக விரோதிகள் மதுகுடித்துவிட்டு பாட்டில்களை உடத்துவிட்டு செல்கின்றனர். இந்த உடைந்த பாட்டில்கள் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களது கால்களை பதம் பார்க்கிறது. இரவு நேரத்தில் மைதானத்தை கண்காணித்து திறந்தவெளி பாராக மாறி வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : playground ,nightclub ,Karur ,
× RELATED விவசாயிகள் ஏமாற்றம் பிரம்மரிஷி...