×

மகன் மாயம் தந்தை புகார்

கரூர், பிப். 12: கரூர் தெற்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(48). இவரது மகன் சிவராமன்(24). காந்திகிராமம் பகுதியில் சிவராமன் ஓட்டல் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 7ம்தேதி ஓட்டலில் இருந்து வீடு சென்று வருவதாக கூறிச் சென்ற சிவராமன் இதுநாள் வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் சிவராமனை தேடியும் கிடைக்காததால் நாகராஜ், தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED சிவகிரி அருகே மகனை வெட்டிய தந்தை கைது