×

மாற்றுத்திறன் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஆசிரியைகளுக்கு பயிற்சி

கரூர், பிப். 12: மாற்றுத்திறனாளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல் ஆசிரியைகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில், கரூர், தாந்தோணிமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய கல்வி வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு இந்த பயிற்சி வகுப்பில், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, எந்த வகையில் பாடங்கள் நடத்த வேண்டும் என்பன போன்ற பயிற்சிகள் ஆசிரியைகளுக்கு வழங்கப்பட்டன. சரவணன், செல்வபிரியா ஆகியோர் கருத்தாளர்களாக கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

Tags : teachers ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்