×

அரசு பள்ளி அருகே குப்பைக்கு தீவைப்பதால் மாணவர்கள் கடும் அவதி

கரூர், பிப்.12: கரூர் அருகே உள்ளது அரசு காலனி. இங்கு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகே கொட்டப்படும் குப்கைளை ஊராட்சி நிர்வாகம் முறையாக அகற்றுவதில்லை. குப்பை மேலாண்மை செய்யப்படாததால் குப்பைகள் பள்ளி இருக்கும் இடமருகே குவிந்துள்ளது.
அகற்றப்படாத குப்பைகளை அவ்வப்போது தீவைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அதிக புகை மூட்டம் எழுகிறது.

பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் புகை மூட்டத்தில் சிக்கி அவதிப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் குப்பை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என பலமுறை கோரியும் நடவடிக்கை இல்லை. சாலைமறியல் போராட்டம் கூட அறிவித்தோம். அதிகாரிகள் வந்து பேசினர். குப்பை அகற்றும் பிரச்னை, குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags : government school ,
× RELATED நீட் தேர்வில் தேர்ச்சி பெறும்...