×

அமைதி பேச்சில் விவசாயிகள் புலம்பல் கரூர் மில்கேட்-வெங்ககல்பட்டி இடையே உயர்மின் கோபுர விளக்கு அமைக்கும் பணி தீவிரம்

கரூர், பிப். 12: கரூர் மில்கேட் முதல் வெங்ககல்பட்டி வரை சாலையின் மையப்பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுங்ககேட் முதல் வெங்ககல்பட்டி வரை சாலையை விரிவாக்கம் செய்யும் வகையில் சாலையோரம் இருந்த 100க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சுங்ககேட் வரை சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு தற்போது வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் உள்ள தாந்தோணிமலையை சுற்றிலும் கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் போன்ற அனைத்து அலுவலகங்களும் இந்த பகுதியில் உள்ளதால் வாகன போக்குவரத்தும் அதற்கேற்ப நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தாந்தோணிமலை மில்கேட் முதல் வெங்ககல்பட்டி வரை சாலையின் மையப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கும் வகையில் சில வாரங்களுக்கு முன்பு தடுப்புச் சுவர் சற்று தள்ளி வைக்கும் பணிகள் நடைபெற்றது. தற்போது, வெங்ககல்பட்டி பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை முதற்கட்டமாக, உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த பணி மில்கேட் வரை நடைபெறும் பட்சத்தில் கரூர் தாந்தோணிமலை சாலை இரவு நேரங்களில் மின் விளக்குகளால் ஜொலிக்க உள்ளது எனவும் கூறப்படுகிறது. நகராட்சியில் முக்கிய பகுதியான தாந்தோணிமலை சாலையில் நடைபெறும் இந்த பணிகள் முடிவடைந்து விளக்குகள் எரியும் நாளை அனைத்து தரப்பினர்களும் எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Peace talk Peasants ,Karur Milkgate-Venkalpatti ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு