×

கொள்ளிடம் அருகே கொரோனா வைரஸ் தடுப்பு விளக்க கூட்டம்

கொள்ளிடம்,பிப்,12: கொள்ளிடம் அருகே கொரோனா வைரஸ் தடுப்பு விளக்க கூட்டம் நடந்தது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் சீனீவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக்கல்லூரியில் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் மற்றும் சுகாதார நோய்த்தடுப்பு மருந்தியக்கம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்புக்கான நடைமுறைகள் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுநர் மற்றும் துணை இயக்குநர் லியாகத் அலி தலைமை வகித்தார். கல்லூரி பொறுப்பு முதல்வர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் பபிதா கலந்து கொண்டு கொரோனா வைரஸ் குறித்து விளக்கமளித்து பேசினார். கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளிலிருந்தும் வந்து முதல்வர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு நோய் குறித்த பல்வேறு சந்தேகங்கள் குறித்து எழுப்பிய வினாக்களுக்கு, மாவட்ட கொள்ளை நோய்த் தடுப்பு வல்லுநர் லியாகத் அலி விளக்கமளித்தார். கூட்டத்தில் அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. முடிவில் தமிழரசி நன்றி கூறினார்.

Tags : Coroner Antivirus Meeting ,
× RELATED மயிலாடுதுறையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்