×

நாகை மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார்

நாகை,பிப்.12: நாகை மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார்.
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் போட்டிகளை தொடங்கி வைத்தார். கூடுதல் கலெக்டர் பிரசாந்த் தலைமை வகித்தார். 21 வயதிற்கு உட்பட்ட 2ஆயிரத்து 328 பேர் கலந்து கொண்டனர். தடகளம், கூடைப்பந்து, கபடி, கையுந்து பந்து, நீச்சல், மேசைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், கைப்பந்து, பூப்பந்து ஆகிய 10 விளையாட்டுகள் நடத்தப்பட்டது.

வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ. 4 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தனி பிரிவு போட்டிகளில் முதல் முன்று இடங்களை பெறுவோர்கள் மற்றும் குழு பிரிவு போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்கள் மாநில அளவில் கலந்து கொள்ள தகுதியானவர்கள் ஆவார்கள். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜா, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் தங்ககதிரவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : OSManiyan ,Inauguration ,Naga District ,Cup ,Chief Minister ,
× RELATED காரைக்குடியில் ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை துவக்கம்