×

நாகை எஸ்பி அறிவுறுத்தல் வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர் வழியாக மதுரைக்கு அதிகாலையில் ரயில் இயக்க வேண்டும்

நாகை,பிப்.12: வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர் வழியாக மதுரைக்கு அதிகாலையில் ரயில் இயக்க வேண்டும் என்று நாகூர் நாகப்பட்டினம் ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் ரயில்வே வாரிய தலைவர் வினோத்குமார்யாதவை சந்தித்து நாகூர் நாகப்பட்டினம் ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் மனு அளித்தனர். அதில் தெரிவித்திருப்பதாவது:
நாகை விவசாய பணியை முதன்மையானதாக கொண்டது. விவசாயிகள் நிரம்ப உள்ளனர். ஆனால் வருமானமோ குறைவானது. கிராமப்புற வளர்ச்சியில் தெற்கு ரயில்வே போதுமான ரயில் சேவைகளை வழங்கவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குறிப்பாக திருவாருர் காரைக்குடி அகலப்பாதை திட்டம் ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்து அமைக்கப்பட்டும் ஒரே ஒரு டெமோ ரயில் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை.

அதற்கு முக்கிய காரணம் இந்த வழித்தடத்தில் 72 ரயில்வே கேட்டுகளுக்கு கேட் கீப்பர்கள் இல்லாததால் 146 கிலோ மீட்டரை கடக்க 7 மணிநேரம் ஆகிறது. இத்தடத்தில் கேட் கீப்பர்களை அமர்த்திட வேண்டுமென கடந்த கூட்டத்தில் ரயில்வே அமைச்சரிடம் கேட்டிருந்தும் இதற்காக ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை என்பதற்கு வருத்தப்படுகிறேன். ஆகையால் வரும் நிதியாண்டில் தேவையான நிதி ஒதுக்கி கீட் கீப்பர்களை நியமித்திட வேண்டும். வேளாங்கண்ணியில் இருந்து நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி வழியாக மதுரைக்கு அதிகாலை வேளையில் ரயில் இயக்கிட வேண்டும். சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வரை திருவாரூர், பட்டுகோட்டை, காரைக்குடி வழியாக ஒரு அந்தியோதயா ரயில் இயக்கிட வேண்டும். நாகூர் புகழ்பெற்ற வழிபாட்டு தளங்களில் ஒன்றாகும். ஏராளமான பக்தர்கள் வருகை தந்து செல்கிறார்கள். இந்த ரயில் நிலையத்தை அனைத்து வசதிகளும் கொண்டதாக மேம்படுத்திட வேண்டும். இதேபோல் நாகை ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

கீழ்வேளூர் மற்றும் கொராடாச்சேரியில் உள்ள ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல வேண்டும். நாகை, - திருவாரூர் ரயில் பாதையில் உள்ள தேவூர் கிராமத்தில் ரயில்வே கீழ்ப்பாலம் இல்லாத நிலையில் சாதாரண மக்களும் பள்ளி மாணவர்களும் 7 கி.மீ தூரம் மாற்று வழியில் செல்ல வேண்டியதால் கீழ்ப்பாலம் அவசியமாக அமைக்க வேண்டும். மன்னார்குடியிலிருந்து சென்னை வரை இயக்கப்படும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் பேரளம் மற்றும் நன்னிலம் ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். தமிழ்நாட்டின் முக்கிய வழிபாட்டு மையங்களில் ஒன்று வேளாங்கண்ணி. எனவே இங்கிருந்து டெல்லிக்கு நேரடி ரயில் இயக்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : Naga SP ,Thiruvarur ,Velankanni ,Madurai ,
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்