×

இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பண நாள் விழா


காரைக்கால், பிப்.12: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்து முன்னணியின் முதல் நிறுவனத் தலைவருமான தாணுலிங்கத்தின் பிறந்த நாளை, சமுதாய சமர்ப்பண நாளாக இந்து முன்னணி நாடெங்கும் கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் இந்து முன்னணி அலுவலகத்தில், நேற்று இவ்விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பாரதீய அறநெறி பண்பாட்டுக் கல்விமையத்தின் மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். இந்து முன்னணியின் காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத் தலைவர் விஜயன் முன்னிலை வகித்தார்.

இந்து முன்னணி திருச்சிக்கோட்ட தலைவர் கனகராஜ் பேசினார். தொடர்ந்து, தாணுலிங்க புகைப்படம் மற்றும் பாரத மாதா படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில், ஏராளமான பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, நகரத் தலைவர் ஜெய்சங்கர் வரவேற்றார். முடிவில் பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags : Hindu Submission Day ,
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்