காரைக்கால், பிப்.12: காரைக்கால் அண்ணாமலை ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து, அறங்காவல் குழுவினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். காரைக்கால் ஸ்ரீ கைலாசநாத சுவாமி, ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தானத்தை சேர்ந்த கடைத்தெரு உண்ணாமுலை அம்பாள் சமேத அண்ணாமலை ஈஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில், கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 14 ஆண்டுகள் ஆனதையொட்டி, மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய கோயில் அறங்காவல் குழுவினர் முடிவெடுத்தனர். அதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி 27ம் தேதி பாலஸ்தாபன பூஜையும் நடைபெற்றது.
தொடர்ந்து, கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், எம்.எல்.ஏ அசனா மற்றும் அறங்காவல்குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ், முக்கியஸ்தர்கள், உபயதாரர்கள், சிவாச்சாரியார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.