×

நாகையில் எலி கறி விற்பனை அமோகம்

நாகை,பிப்.12: நாகை பகுதியில் நெல் அறுவடை பணி நடப்பதால், அதில் சிக்கும் எலிகளை பிடித்து கறிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் எலி கறி அமோகமாக விற்பனை நடக்கிறது. நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வயல் வெளிகளில் சுற்றித்திரியும் எலிகளை பிடித்து விற்பனை செய்யப்படுகிறது. வயல் எலி கறியை உண்பதால் மூட்டு வலி, இடுப்பு வலி உள்ளிட்டவைகள் நீங்குவதுடன் ஒருவித மருத்துவ குணம் இருப்பதாக கூறி பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கம்பிகளில் 2 பெரிய எலி, 4 சின்ன எலி என 6 எலிகளாக கட்டப்பட்டு ஒரு கட்டு ரூ.100க்கு விற்பனை செய்யபட்டுகிறது. வயல் எலிக்கறி நாகை அருகே புலியூர் பகுதியில் கனஜோராக நடந்து வருகிறது.

சட்டமன்றம் முற்றுகை
முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கூறுகையில், ‘கால் நூற்றாண்டாக இந்த கோரிக்கை எழுந்து வருகிறது. தஞ்சையை பிரித்து நாகை காயிதேமில்லத் மாவட்டம் உருவாகியபோதே மயிலாடுதுறையில் போராட்டம் துவங்கிவிட்டது. ஆனால் இதுநாள்வரை மாவட்டம் உருவாக்கப்படவில்லை, வரும் கூட்டத்தொடரில் நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறோம், தமிழக அரசும் புறம் தள்ளினால் வேறு வழியின்றி வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டமன்றம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : Rat curry sale ,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை...