×

ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்

நாகர்கோவில், பிப்.12: ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் செல்வம் நேற்று காலை மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வம்(48). கடந்த மாதம் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக இவர் மருத்துவ விடுப்பில் சென்றார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை உடல் நிலை மோசமாகி செல்வம் மரணம் அடைந்தார். இவர் குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி நொச்சிக்குளம் ஆகும். இன்ஸ்பெக்டர் செல்வம் மரணம் அடைந்த தகவல் கேள்விப்பட்டதும் குமரி மாவட்டத்தில் உள்ள போலீசார் மதுரை சென்றனர். இறந்து போன செல்வத்துக்கு நாகஜோதி என்ற மனைவியும், ரித்திகா(17), தர்சினியா(13) என்ற இரு மகள்களும் உள்ளனர்.

குமரி மாவட்ட காவல்துறையில் சமீப காலமாக சோக சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. கடந்த  ஆண்டு டிசம்பரில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் பணிக்கு வந்து கொண்டு இருந்த போது விபத்தில் உயிரிழந்தார். கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். கடந்த ஜனவரி மாதம் 8ம்தேதி களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டு ெகால்லப்பட்டார். இந்த நிலையில் தற்போது இன்ஸ்பெக்டர் ெசல்வம் உயிரிழந்துள்ளார். இதே போல் நேற்று காலை கலெக்டர் பங்களா சுவர் இடிந்து  பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் சித்ரா படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : death ,inspector ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு