×

20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, பிப். 12:   ஈரோட்டில் 20சதவீதம் ஊதியம் வழங்க வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோட்டில் வங்கி ஊழியர் அதிகாரிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தலைமை ஸ்டேட் வங்கி வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தலைமை தாங்கினார். வங்கி ஊழியர் சங்கங்களின் தலைவர்கள் பாக்கிய குமார், முத்துக்கிருஷ்ணன், பூவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 20சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
வாரத்தில் வேலை நாட்கள் 5 நாட்களாக அறிவிக்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். குடும்ப ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். அதிகாரிகளின் பணி நேரம் நிர்ணயிக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

அடிப்படை ஊதியத்துடன் சிறப்பு பண பலன்களை வழங்க வேண்டும். ஊழியர்கள் நல நிதி ஒதுக்கீடு, செயல்பாட்டு லாபத்தில் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி அதிகாரிகள், சங்க தலைவர்கள் சந்திரசேகரன், வடிவேல், முருகேசன், வேலுச்சாமி மற்றும் வங்கி ஊழியர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Bank employees ,
× RELATED இந்தியா 2 வகைகளில் பொருளாதார பின்னடைவை...