லாட்ஜில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு, பிப். 12: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ஈரோடு லாட்ஜில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சிவகங்கை மாவட்டம் கொடிகுளம் ஏம்பல் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (35). இவர் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் லாட்ஜில் கடந்த 45 நாட்களாக தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் உணவு சாப்பிட்டு விட்டு, அவரது அறைக்கு சென்றவர் மீண்டும் கீழே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர் மாணிக்கவாசகம் தங்கியிருந்த அறைக்கதவை நீண்ட நேரம் தட்டி பார்த்தனர். ஆனால், அவர் திறக்கவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் தகவல் அறிந்து சம்பந்தப்பட்ட லாட்ஜிற்கு சென்று, மாணிக்கவாசகம் தங்கியிருந்த அறையினை மாற்று சாவி மூலம் திறந்து பார்த்தனர். அப்போது அறையில் உள்ள பேனில் லுங்கியால் தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கியபடி கிடந்தார்.  இதையடுத்து போலீசார் மாணிக்கவாசகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>