×

வேளாண்மை விரிவாக்க பட்டய படிப்பு துவக்கம்

ஈரோடு, பிப். 12: ஈரோடு அருகே திண்டல்மேடு பகுதியில் உள்ள வேளாண்மை பட்டதாரிகள் ஆலோசனை மற்றும் சேவை மையம் சார்பில் 5வது குழுக்கான ஓராண்டு வேளாண்மை விரிவாக்க பட்டய படிப்பு துவக்க விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தலைவர் துரைசாமி வரவேற்புரையாற்றினார். இதில் கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி பட்டய படிப்பை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: வேளாண்மையில் விரைவான வளர்ச்சியும், அதிக உற்பத்தியை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக புதியதாக வரும் மருந்துகளை அறிந்து பரிந்துரைக்க வேண்டும். களைக்கொல்லி, அதிக ரசாயனம் உள்ள மருந்துகளை பரிந்துரை செய்தால், மண்ணின் தன்மை கெட்டுபோய் விடும்.

மண்ணின் தன்மை, விளை பொருளில் கலப்பு தன்மை இல்லாதது, நல்லவை செய்யும் பூச்சிகள் அழியாத வகையில் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும். இயற்கை விவசாயத்தை அதிகரிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் இணைச் செயலாளர்கள் சிவநேசன், குருசாமி, முரளிதரன், செயலாளர் பிரபாகரன், முன்னாள் வங்கி அதிகாரி வணங்காமுடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Commencement ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...