×

சுமைதூக்கும் தொழிலாளர் சங்க கூட்டம்

ஈரோடு, பிப். 12:  ஈரோடு மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி சுமைதூக்கும் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் சின்னசாமி கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளித்திட ஒருங்கிணைந்த மத்திய சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தமிழகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு தனிநலவாரியம் அமைத்து அனைவரையும் உறுப்பினராக்க வேண்டும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பரிந்துரைப்படி தொழிலாளர்கள் சுமக்கும் எடையின் அளவு 55 கிலோவிற்குள் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய ஓய்வறைகளை அரசே அமைத்து தர வேண்டும், பணியிட விபத்துகளில் உயிரிழக்கும் சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவி தொகைகளையும் செலவினகளுக்கு ஏற்ப உயர்த்த வேண்டும், மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்,

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18ம் தேதி மாலை 4 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப்பில் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட சங்க ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,Heavy Workers Union ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...