×

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பூச்சி மருந்துகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்

ஈரோடு, பிப். 12:  கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தலைவர் நல்லசாமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் இந்த பகுதியில் நடைமுறைப்படுத்தப்படாது எனவும் கூறியுள்ளார். இந்த அறிவிப்பை கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் வரவேற்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களை தாக்கிய வெள்ளை ஈக்கள் இன்று தமிழகத்தில் அதிக அளவில் தென்னை மரங்களை தாக்க தொடங்கி விட்டது.

இதை தடுக்க வேளாண்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பூச்சி மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தும் முறையை வேளாண்துறை பரிந்துரை செய்ய கூடாது. ஈக்களை கட்டுப்படுத்த பூச்சி மருந்துகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் செயலாளர்கள் கண்ணுசாமி, கனகராஜ், மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை