×

கோவை அருகே பயங்கரம் ஒர்க்ஷாப் உரிமையாளர் கொலை

கோவை, பிப்.12:  கோவை கணபதி அருகேயுள்ள பதிகவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (46). லேத் ஒர்க்ஷாப் உரிமையாளர். இவர் மனைவி ரத்தினம். இவர்களுக்கு 2 மகன் உள்ளனர். சசிகுமாருக்கு மதுப்பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் சசிகுமார் கூ. கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கல்லுக்குழிக்கு சென்றார். திரும்பி வரவில்லை. இந்நிலையில் நேற்று காலை அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் கல்லுக்குழியில் ரத்தக்காயங்களுடன் சசிகுமார் இறந்து கிடக்கும் தகவலை பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சசிகுமாரின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. அவரது தலையிலும் காயம் இருந்தது. ரத்தக்கறையுடன் கல் ஒன்றும் கிடந்தது. சசிகுமார் தனது நண்பர் ஒருவருடன் மது பாட்டிலுடன் அங்கு சென்றதாக தெரிகிறது. அவரை விசாரிக்க போலீசார் தேடினர். ஆனால் அவர் காணாமல் போய் விட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே தலையில் கல்லை போட்டு சசிக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மது போதையில் சசிக்குமார் தவறி விழுந்து தலை, முகத்தில் காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகமும் இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவின் இறப்பிற்கான காரணம் தெரியும் என விசாரணை நடத்தும் போலீசார் தெரிவித்தனர்.

Tags : workshop owner ,Coimbatore ,
× RELATED சென்னை கோயம்பேட்டில் மளிகை பொருட்கள் விற்பனை 27,28 தேதிகளில் நிறுத்தம்