×

கள்ளத்தனமாக மது விற்பனை சத்திரம் கிராமத்தில் இயங்கும் டாஸ்மாக்கை அகற்ற வேண்டும்

நெய்வேலி, பிப். 12: குள்ளஞ்சாவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோரணப்பட்டு ஊராட்சி  சத்திரம் கிராமம் உள்ளது. இங்குள்ள பேருந்து நிலையம் எதிரில் தனியார் இடத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான மதுபானக்கடை இயங்கி வருகிறது. சுற்றியுள்ள வேகாக்கொல்லை, ஆயிப்பேட்டை, வெங்கடாம்பேட்டை, வசனாங்குப்பம், சிறுதொண்டமாதேவி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த குடிமகன்கள் இங்கு வந்து மது அருந்துவது வழக்கம். இங்குள்ள கடையின் அருகில் தினமும் விடியற்காலை முதல் நள்ளிரவு வரை சட்டவிரோதமாக போலீசார் துணையுடன் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த மதுபான கடைக்கு அருகில் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளதால் குடிமகன்கள் தினமும் குடித்துவிட்டு சாலையில் செல்லும் பொதுமக்களிடம், குடியிருப்புகளில் இரவு நேரங்களில் சென்று பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் சுற்றியுள்ள கிராமத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை நடக்கிறது. கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் அதிகமாக போலி மதுவை விற்பனை செய்து வருகின்றனர். எனவே குடிமகன்களிடம்  போலி மதுவை விற்பனை செய்பவர்களை குள்ளஞ்சாவடி போலீசார் கட்டுப்படுத்தவும், டாஸ்மாக் கடையை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED புதுவை முழுவதும் 2வது நாளாக 150...