×

சூதாடிய 4 பேர் கைது

விருத்தாசலம், பிப். 12: விருத்தாசலம்  அடுத்த ஆலடி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடியப்பட்டு கிராமத்தில்  உள்ள குளத்தின் அருகே அதே பகுதியை சேர்ந்த வீராசாமி மகன் கருணாநிதி(42),   குப்புசாமி மகன் சுந்தரம்(45), கேசவன் மகன் குமார்(47), சுந்தரமூர்த்தி(58)   ஆகிய 4 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்ததால் கையும் களவுமாக   பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து 200 ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED ஓசூரில் பல்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது