×

ரூ73 லட்சம் நிலமோசடி பெங்களூரு தொழிலதிபருக்கு குற்றப்பிரிவு போலீஸ் வலை


விழுப்புரம், பிப். 12: கடலூர் பெண்ணிடம் ரூ.73 லட்சம் நில மோசடி செய்த வழக்கில் பெங்களூர் தொழிலதிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் கொளஞ்சி மனைவி பழனியம்மாள். இவர்   விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம் தென்பசியார் கிராமத்தில் கடந்த 2012ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட 9   பேருக்குச்சொந்தமான 24.60 சென்ட்இடத்தை எனது கணவர் கொளஞ்சி, ரூ.73  லட்சத்திற்கு கிரயம் பேசினர். அதில், ரூ.40 லட்சம் பணத்தை முன்பணமாக   கொடுத்து, செந்தில் உள்ளிட்ட 9 பேரும் எனது கணவரின் பெயருக்கு பொது அதிகார  பத்திரம் எழுதிக்கொடுத்தனர்.

பின்னர் எனது கணவர் கொடுத்த மீதிபணமான ரூ.33,81,500ஐ அனைவரும், அவரவர் பாகத்திற்கேற்ப பிரித்துக்கொண்டனர்.   இதனிடையே எனது கணவர் 2017ல் இறந்துவிட்டதால் பொதுஅதிகார பத்திரம் காலாவதியாகி விட்டது. பின்னர் நான் (பழனியம்மாள்) 9 பேரிடமும் சென்று எனது   பெயருக்கு கிரயம் எழுதி கொடுக்குமாறு கேட்டேன். அதில் 8 பேர் ஒப்புக்கொண்ட நிலையில், செந்தில்குமார் மட்டும் கிரயம் செய்து கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் செந்தில்குமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை  தேடிவருகின்றனர்.

Tags : businessman ,Bangalore ,
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்