×

41 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

வாலாஜாபாத், பிப். 12:  வாலாஜாபாத் ஒன்றியம் நாயக்கன்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, 141 மாணவர்களுக்கு, தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.  மேலும், இப்பள்ளியில் சிறப்பாக படிக்கும் மாணவர்கள் மற்றும் 100 சதவீதம் பள்ளி நாட்களில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு அப்துல்கலாம் அறிவு புத்தகங்களை நினைவு பரிசாக வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சேகர், மாணவரணி அமைப்பாளர் சுரேஷ்குமார், வெங்கடேசன், அவைத்தலைவர்  பன்னீர்செல்வம், விக்டர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு