×

திருக்கழுக்குன்றத்தில் வார்டு வரையறையில் குளறுபடி: திமுகவினர் புகார்

திருக்கழுக்குன்றம், பிப்.12: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் முறையாக வார்டு வரையறை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக சார்பில் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 32 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு முறையாக மக்கள் தொகை அடிப்படையிலும், வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவும் வார்டு வரையறை செய்யாமல் குளறுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி, குளறுபடி உள்ள வார்டு வரையறை பட்டியலை உடனடியாக சரி செய்ய வேண்டும் என திருக்கழுக்குன்றம் பேரூராட்சி திமுக செயலாளர் ஜி.டி.யுவராஜ் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரூராட்சி எழுத்தர் முனுசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், மாவட்ட கலெக்டர் உரிய ஆய்வு செய்து முறைபடுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...