×

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் லட்சுமி பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழா

மதுராந்தகம், பிப். 12: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று காலை முதல் மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்ற அவர், பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார். இதைத்தொடர்ந்து, ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு வந்த அவருக்கு செவிலியர்கள், பணியாளர்கள் உள்பட பலரும்  சிறப்பான வரவேற்பளித்தனர். மேலும், அங்கு வைக்கப்பட்டு இருந்த பிறந்தநாள் கேக்கை வெட்டி, மருத்துவமனைக்கு வந்த குழந்தைகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் மருத்துவமனை இயக்குனர் டாக்டர்கள் ரமேஷ், பிரசன்ன வெங்கடேஷ், மதுமலர், மருத்துவமனை நிர்வாகி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவமனையில் சிறப்பாக பணி புரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags : Birthday Party ,Lakshmi Bangaru Adikallar ,
× RELATED பிறந்தநாள் பார்ட்டி கொடுத்த பாடகி...