×

பள்ளி வேன் கவிழ்ந்து 4 மாணவர்கள் காயம்

சாயல்குடி, பிப்.11: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அரியனேந்தலில் உள்ள தனியார் பள்ளியின் வேன் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் 16 மாணவ,மாணவிகளுடன் புறப்பட்டது. வேன் முதுகுளத்தூர் அருகே புழுதிக்குளம் கிராமத்தில் உள்ள வளைவில் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் வேனில் சிக்கிய மாணவ,மாணவிகளை மீட்டனர். இதில் பள்ளி மாணவர்கள் தேவ்ஜஸ்வின், பூமிகா, தேவிகா, மோனிகா ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மதுரை மற்றும் ராமநாதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து நடந்ததும் வேனின் டிரைவர் சத்தியமூர்த்தி காயத்துடன் தப்பி சென்றார். விபத்து குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து
வருகிறார்.

Tags : School van ,
× RELATED பள்ளி வேன் டிரைவர் வெட்டி கொலை