×

கடமலை மயிலை ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள் கூட்டம்

வருசநாடு, பிப்.11: கடமலை மயிலை ஊராட்சி ஒன்றிய தலைவர் கூட்டமைப்பிற்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடமலை மயிலை முன்னாள் ஒன்றிய சேர்மன் முருக்கோடை ராமர் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துரைச்சாமிபுரம் ஊராட்சித் தலைவர் மாயகிருஷ்ணன் கூட்டமைப்பு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக தும்மக்குண்டு ஊராட்சி தலைவர் பொன்னழகுசின்னகாளை, செயலாளராக மந்திசுனை மூலக்கடை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, பொருளாளராக மேகமலை ஊராட்சி தலைவர் பால்கண்ணன், துணைசெயலாளராக பழனிச்சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்தந்த ஊராட்சிகளில் செய்யவேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் கடமலைக்குண்டு ஊராட்சிமன்ற தலைவர் சந்திராதங்கம், சிங்கராஜபுரம் ஊராட்சி தலைவர் நாகராஜ், வருசநாடு ஊராட்சிமன்ற தலைவர் மணிமுத்து, பொன்னன்படுகை ஊராட்சி மன்றத்தலைவர் பூங்காகாத்தமுத்து, கடமலைக்குண்டு முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் செந்தட்டிகாளை, கண்டமனூர் கூட்டுறவு சங்க இயக்குனர் பாலசுப்பிரமணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிரேம்ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Meeting ,panchayat leaders ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...