×

சிங்கம்புணரி யூனியன் கூட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க தீர்மானம்

சிங்கம்புணரி, பிப். 11:  சிங்கம்புணரி யூனியன் கூட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக விநியோகம் செய்து குடிநீர் பிரச்னையை தீர்ப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் திவ்யா தலைமை வகித்தார். பிடிஓ பத்மநாபன், துணைத்தலைவர் சரண்யா முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் உமா, பெரிய கருப்பி, இளங்குமார், கலைச்செல்வி, சசிக்குமார், சத்தியமூர்த்தி, உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிங்கம்புணரி ஒன்றியத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க அனைத்து கிராமங்களுக்கும் சம தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
பின்னர் 1வது வார்டு உறுப்பினர் கலைச்செல்வி பேசுகையில், ‘ஒன்றாவது வார்டுக்குட்பட்ட சேதமடைந்த புதுப்பட்டி மற்றும் மேலப்பட்டியிலிருந்து பிள்ளையார்பட்டி வரையிலான சாலையை சீரமைக்க வேண்டும். மேலப்பட்டி முதல் ஆதிதிராவிடர் காலனி வரையிலான சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து 4வது வார்டு உறுப்பினர் உமா பேசுகையில், ‘காளாப்பூர் எஸ்வி மங்கலத்திற்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். கூட்டத்தில் மின்வாரியம், தோட்டகலைத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பிற துறை அலுவலர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : meeting ,Singampunari Union ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...