×

காளையார்கோவிலில் விளக்கு பூஜை

காளையார்கோவில், பிப். 11:  காளையார்கோவில் கஸ்தூரி பாய் தெருவில் உள்ளது ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில். இங்கு 34ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம் மாலை விமரிசையாக நடந்தது. முன்னதாக வேதமந்திரங்கள் முழங்க, விஷேச பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை விழா கமிட்டி, பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Pooja ,Kaliyarikovil ,
× RELATED மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை