×

கமுதி பகுதியில் அச்சுறுத்தும் மின்கம்பம்

கமுதி, பிப்.11: கமுதி நகர் முழுவதும் ஏராளமான மின் கம்பங்கள் சேதமடைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கமுதியில், நாடார் பஜார், முஸ்லீம் பஜார், செட்டியார் பஜார், சந்தை பேட்டை பகுதி போன்ற வீதிகளில் வாகனங்கள் செல்லும் சாலையில் நீண்ட நாட்களாக சேதமடைந்த நிலையில் ஏராளமான மின் கம்பங்கள் காணப்படுகின்றன. இதேபோல் தெருக்களிலும் அதிகமான அளவில், சேதமான மின் கம்பங்கள் உள்ளன. இவைகள் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. இவைகளை அகற்றி, புதிய மின் கம்பம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kamuthi ,area ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...