×

ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி மாணவி தற்கொலை

ஒட்டன்சத்திரம், பிப். 11: ஒட்டன்சத்திரம் அருகே பெற்றோர் கண்டித்ததால் பூச்சி மருந்து குடித்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒட்டன்சத்திரம் அடுத்த வடகாடு ஊராட்சி கும்ளாமரத்துப்பட்டியை சேர்ந்த கருப்பையா மகள் பூமித்தாய் (17). இவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். கடந்த 3 மாதமாக பூமித்தாய் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாகவும், இதனை பெற்றோர் கண்டித்ததாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த பூமித்தாய் கடந்த ஜன.15ல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து வாந்தி எடுத்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பூமித்தாய் உயிரிழந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,Ottansatham ,
× RELATED காற்றில் மின்வயர் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் சாவு