×

புழல், செங்குன்றம் பகுதிகளில் வழிகாட்டி பலகை சேதமானதால் வழிமாறி செல்லும் வாகன ஓட்டிகள்

புழல், பிப். 11 : புழல், செங்குன்றம் பகுதிகளில் சேதமான வழிகாட்டி பலகைகளை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மாதவரம் ரவுண்டானா ஜிஎன்டி சாலை, ரெட்டேரி, புழல்-அம்பத்தூர் சாலை சந்திப்பு, சாமியார் மடம், செங்குன்றம்-திருவள்ளூர் கூட்டு சாலை சந்திப்பு, பாடியநல்லூர், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் சோழவரம் பஜார் சாலை பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2016ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வர்தா புயலால் மேற்கண்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த வழி காட்டி பலகைகள் கீழே விழுந்தது. பல இடங்களில் பெயர்பலகை போர்டுகள் காற்றில் பறந்துவிட்டது. ஒருசில வழிகாட்டி பலகையில் ஊர்பெயர் சேதமானது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் திணறி வருகின்றனர். மேலும் சில இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை ஓரங்களில் வழிகாட்டி பலகைகள் விழுந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே, உடைந்த வழிகாட்டி பலகைகளை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Motorists ,areas ,
× RELATED சென்னையிலும் வருகிறது பசுமை பந்தல்!