×

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அரசு பள்ளிகளில் 834 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

ஸ்ரீபெரும்புதூர், பிப்.11: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம்,  ஸ்ரீபெரும்புதூர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தண்டலம், மாத்தூர், மொளச்சூர், பண்ருட்டி, மதுரமங்கலம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 834 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தனசேகரன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன், ஒன்றிய செயலாளர் முனுசாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சிவகுமார், எஸ்.பி.எம்.முருகன், மதன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி, காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு 834 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினர். ஒன்றிய செயலாளர் சிங்கிலிபாடி ராமசந்திரன், பேரூர் செயலாளர் குமார், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெரும்புதூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி லிங்கேஸ்வரன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மலர்கொடி, தண்டலம் திருநீலகண்டன், மாத்தூர் செங்குட்டுவன், மொளச்சூர் ராஜம், பண்ருட்டி காண்டீபன், மதுரமங்கலம் அருள் தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Sriperumbudur Union Government Schools ,
× RELATED புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை...