×

கந்துவட்டி கொடுமையால் தம்பதி தீக்குளிக்க முயற்சி

சேலம், பிப்.11:  சேலம் கலெக்டர் அலுவலகத்தில், கந்துவட்டி கொடுமையால் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் கிச்சிபாளையம் ஓந்தாபிள்ளைகாடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (47). இவரது மனைவி சரஸ்வதி (40). இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலக வராண்டாவில் கணவன், மனைவி இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கார்த்திகேயன் டிராவல்ஸ் மற்றும் கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதற்காக பலரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்துள்ளார். கடன் கொடுத்தவர்கள், அதனை திரும்பக் கேட்டு மிரட்டியதால் மனஉளைச்சலில் தவிப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மனைவியுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும்  தெரியவந்துள்ளது.

Tags :
× RELATED சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறி...