×

தாரமங்கலத்தில் பரபரப்பு கைலாசநாதர் கோயில் தேர்திருவிழாவில் மோதல்

தாரமங்கலம், பிப்.11: தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தேர்திருவிழாவின் போது, இளைஞர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் நகை கடை உள்ளிட்ட கடைகளின் கண்ணாடி மற்றும் லைட்டுகள் அடித்து நொறுக்கப்பட்டது. சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயிலில், தைப்பூச தேர் திருவிழா கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று 3வது நாள் கடைசி நிகழ்ச்சி என்பதால், தேர் திருவிழா விமர்சையாக நடந்தது. நேற்று மாலை இறுதிநாள் தேரோட்டம் நடந்தது. கடந்த 2 நாட்களாக இழுக்கப்பட்டு வந்த தேரை, கோயில் முன்பு நிலை நிறுத்துவதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இழுத்து வந்தனர்.

இரவு 8 மணி அளவில் தேரை இழுத்து வந்த இளைஞர்கள் சிலருக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிலர், அருகே உள்ள கடைகளில் டியூப்லைட்டை உடைத்து நொறுக்கினர். மேலும், அங்குள்ள நகை கடை கண்ணாடியையும் அடித்து உடைத்தனர். இதுகுறித்து தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த தாரமங்கலம் போலீசார், சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர், இது குறித்து இன்று(11ம் தேதி) காலை விரிவாக விசாரித்து சம்மந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து விட்டு சென்றனர்.

Tags : clash ,Parabharam Kailasanathar Temple ,Taramangalam ,
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...