×

வாக்காளருக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம்

சேந்தமங்கலம், பிப்.11:  கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், சோளக்காட்டில் வாக்காளருக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்ளுக்கு நன்றி தெரிவிப்பு மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், சோளக்காட்டில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் மாதேஷ்வரி அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சிவப்பிரகாசம், செம்மேடு லேம்ப் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கொல்லிமலை ஒன்றிய அதிமுக செயலாளரும், சேந்தமங்கலம் எம்எல்ஏவுமான சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தலைமைக் கழக பயிற்சியாளர் தர்மராஜ், ஒன்றியக்குழு துணைத் தலைவர் நடராஜன், பேரவை செயலளாளர் வர்ணன் உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,voter ,
× RELATED சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 9.30 மணி...