×

புழல் ஏரிக்கு வினாடிக்கு 515 கன அடி தண்ணீர் திறப்பு

சென்னை: கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. நேற்று மாலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 30.32 அடியாக பதிவானது. ஏரியில், 1,816 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.  இதன் காரணமாக, பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாய் மூலம் வினாடிக்கு 515 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு இந்த நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

Tags : Pullam Lake ,
× RELATED ராட்சத குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்: அதிகாரிகள் அலட்சியம்