×

ராசிபுரத்தில் ₹55 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரம், பிப்.11:  ராசிபுரம்  கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் ₹55 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆர்.கவுண்டம்பாளையம் கிளையில், பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி அண்டைய மாவட்டங்களான சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களிலிருந்தும், 2912 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பொது ஏலத்தில் ஆர்சிஎச் ரகம் குவிண்டால் ₹4969 முதல் ₹5589 வரையும், டிசிஎச் ரகம் ₹7070 முதல் ₹7490 வரையும் ஏலம் போனது. இதன்மூலம் ₹55 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags : Cotton auction ,Rasipuram ,
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்