×

விவேகானந்தா மருத்துவமனை வளாகத்தில் கர்ப்பிணிகளுக்கான இலவச ஆலோசனை சிறப்பு முகாம் துவக்கம்

திருச்செங்கோடு, பிப்.11: திருச்செங்கோடு அருகே எளையாம்பாளையத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா மருத்துவமனை வளாகத்தில் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான இலவச ஆலோசனை சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. சிறப்பு மருத்துவர் டாக்டர் விமலா கதிர்வேல் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு பெணகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். ரத்த அளவு, சர்க்கரை அளவு, தைராய்டு பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, அடிவயிறு ஸ்கேன் ஆகியவை  இலவசமாக செய்யப்பட்டன. இந்த முகாம் வரும் 16ம் தேதி வரையிலும் நடக்கிறது. மருத்துவமனையில் 24 மணி நேரமும் பிரசவம் மற்றும் சிசேரியன் வசதி உள்ளதாகவும், 24 மணி நேரமும் பிரசவத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இலவச மருத்துவ முகாம் துவக்கவிழாவிற்கு நிறுவனர் கருணாநிதி தலைமை வகித்தார். மேலாண் இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்து விளக்கேற்றி வைத்தார். இணை மேலாண இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், துணை செயலர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணைத்தலைவர் கிருபாநிதி, செயல் இயக்குனர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரிகளின் முதன்மை அதிகாரி சொக்கலிங்கம், அட்மிஷன் இயக்குனர் வரதராஜன் மற்றும் டாக்டர்கள் கலந்து  கொண்டனர்.

Tags : Launch ,Vivekananda Hospital Campus ,
× RELATED வணக்கம், உங்கள் முதல்வர் எடப்பாடி...