×

அரூர் கூட்டுறவு சங்கத்தில் 1050 பருத்தி மூட்டை ₹2 கோடிக்கு ஏலம்

அரூர், பிப்.11: அரூர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 1050 பருத்தி மூட்டை ₹2கோடிக்கு ஏலம் போனது. அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஏலத்தில், அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 78 விவசாயிகள் 520 பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ₹5104 முதல் ₹5609 வரையும், வரலட்சுமி (டிசிஎச்) ரகம் ₹6890 முதல் ₹7356 வரையும் ஏலம் போனது. இதில், மொத்தம் 1050 மூட்டை பருத்தி, ₹2லட்சத்திற்கு ஏலம் போனது. பருத்தி ஏலம் முடிந்தவுடன் உடனடியாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்