×

கருணை வேலைக்காக விண்ணப்பித்த இறந்த சத்துணவு ஊழியர்களின் வாரிசுகள் அசல் சான்றுகள் அளிக்க வேண்டும்

வேலூர், பிப்.11: சத்துணவு திட்டத்தின் கீழ் அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் வேலையின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளில் வேலைக்கேட்டு மனு அளித்தவர்கள் தங்களது அசல் சான்றுகளை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பணியில் இருக்கும்போது இறந்த அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்களின் வாரிசுகள் கடந்த 2004ம் ஆண்டு வேலை கேட்டு மனு அளித்துள்ளனர். ஆனால், அசல் சான்றிதழ்கள் அளிக்கவில்லை. எனவே, வேலை கேட்டு மனு அளித்தவர்கள் மதிப்பெண், இருப்பிடம், வகுப்பு, வாரிசு, சுயசான்று,மற்ற வாரிசுதாரர்களின் மறுப்பின்மை சான்று உள்ளிட்டவைகளின் அசல் சான்றிதழ்களை ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் மூலமாக இம்மாதம் 29ம் தேதிக்குள் வேலூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு பிரிவு) அனுப்ப வேண்டும். அசல் சான்றிதழ்கள் அளிக்க தவறினால் வாரிசுதாரர்களின் பெயர்கள் கருணை அடிப்படை பணியின் முன்னுரிமை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : Heirs ,nutrition workers ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் மனு