8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வுக்கு தட்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

திருவண்ணாமலை, பிப்.11: 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் உள்ள தனித்தேர்வர்கள் தட்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ள தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும், இதுவரை சிலர் விண்ணப்பிக்காமல் உள்ளனர்.இத்தகைய தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு தேர்வுகள் இயக்ககம் கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, இதுவரை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் உள்ள தனித்தேர்வர்கள் தட்கல் சிறப்பு திட்டத்தில் நாளை 12ம் தேதி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.இந்த சிறப்பு திட்டத்திலும் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்பிக்க உள்ளவர்கள் தேர்வுத்துறையின் சேவை மையங்களுக்கு சென்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று அறிந்து கொள்ளலாம்.

Related Stories: