×

அன்னதான கூடத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


தர்மபுரி, பிப்.11: தர்மபுரி குமாரசாமிபேட்டை தேர்திருவிழாவில், அன்னதான உணவு கூடத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உணவகங்கள், ஓட்டல்கள், டீக்கடைகள், பலசரக்கு கடைகள், பொட்டலங்கள் தயாரிக்கும் இடங்கள் உள்ளிட்ட உணவு தயாரிக்கும் இடங்களில், உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு, தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேர்திருவிழா நடந்தது. இதையொட்டி, பாரிமுனை நண்பர்கள் சார்பில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக உணவு தயாரிக்கும் பணி நடந்தது. இந்த பணிகளை தர்மபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பார்வையிட்டு உணவு பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்கப்பட்டு இருக்கிறதா என ஆய்வு செய்து அதற்கான சான்றிதழை வழங்கினார்.

Tags : Food security officials ,
× RELATED வீரபாண்டி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை