×

அரூர் அருகே வீட்டில் தீ பிடித்து பொருட்கள் நாசம்

அரூர், பிப்.11: அரூர் ஆத்ேதார வீதியை சேர்ந்தவர் கார்த்தி(32) ஜவுளி வியாபாரி. இவரது மனைவி ஆனந்தலட்சுமி. 2குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 7மணியளவில், ஆனந்தலட்சுமி கடைக்கு சென்று விட்டார். குழந்தைகள் வெளியே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அவரது ஓட்டு வீட்டில் தீ பிடித்து புகை மூட்டம் ஏற்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள், தீயை அணைக்க முயன்றனர். இது குறித்து அரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், வீட்டில் இருந்த பொருட்கள் பணம், நகைகள் எரிந்து நாசமானது. மின்  கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாக, தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Tags : home ,Arur ,
× RELATED ஊரடங்கால் பழநியில் மணமகள் வீட்டில் எளிமையாக நடந்த திருமணம்