×

விவசாயிகளிடம் கொள்முதல் நெல் மூட்டைகள் கிடங்கில் அடுக்கி வைப்பு

திருவாரூர், பிப். 11: திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் முட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு வந்து அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 3 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்ற நிலையில் அதன் மூலம் விவசாயிகளிடமிருந்து 5 லட்சத்து 43 ஆயிரம் மெ. டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டிலும் அதே அளவில் சம்பா சாகுபடி பணி நடைபெற்று தற்போது அறுவடை பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் 443 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் மெ. டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் இருந்து வரும் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகள் ஆகியவற்றில் லாரிகள் மூலம் கொண்டு வந்து அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் படி திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் இருந்து வரும் திறந்தவெளி கிடங்கிற்கு நேற்று நெல் மூட்டைகளை லரிகள் முலம் கொண்டு வந்து அடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Tags : warehouse ,
× RELATED ஜீப்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்;...